சிரிப்பே சீவியம் செய்தொழில் தெய்வம்
சிரித்திரன் மீண்டும் புதுப்பொலிவுடன் பரிணாமம் பெற்று மிளிர்கிறான். சிரித்திரன் இதழின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் எங்கள் பயணத்தில் பங்களிக்க உங்கள் அன்பளிப்புகளை எதிர்பார்த்து இருக்கிறோம். சிரித்திரன் சஞ்சிகையை மீள்பிரசுரம் செய்தலோடு, எமது மண்ணின் எழுத்தாளர்களுக்கு களம் அமைக்கவும், கருத்தூண்களால் ஒரு சஞ்சிகையை கட்டி அமைக்கவும், சரித்திர புகழ் வாய்ந்த சிரித்திரன் சஞ்சிகைக்கு இலத்திரனியல் (digital) வடிவம் வழங்கவும், இலக்கிய ஆர்வமுள்ள எம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கவும், யாழ்ப்பாணத்தில் சிரித்திரன், கருத்தூண் (cartoon) நூலகங்களை அமைக்கவும் என சிறப்பான மாற்றங்களை கொண்டு வர புதிய கண்டுபிடிப்புகளுக்கான வளர்ச்சியகம் முன்வந்துள்ளது.
இத்தகைய அரும்பயணத்தில் உங்கள் ஆதரவு மிகவும் ஆதுரமானது. குறிப்பாக வாசகராகவும், ஆர்வலராகவும் உங்கள் பங்களிப்பினை நாங்கள் எதிர் பார்க்கின்றோம். வெளியீடு, மற்றும் விநியோக பணிக்கென மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை செலவு செய்யபப்டுகின்றது, இத்தகைய பணிகளை சரிவர தகவமைத்துத் கொள்வதில் நன்கொடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எமக்கு வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளும் சிறப்பான மேலாண்மை நோக்கங்களுக்காக பயன்படுகின்றன. நாங்கள் ஒரு நடத்தப்படும் ஒரு சமூக அமைப்பாகும், உலகெங்குமுள்ள அன்பர்களின் ஆதரவுடனேயே சிறப்பாக சிரித்திரனை நடாத்தி வர இயலுமாக இருக்கிறது.
சிரித்திரனின் இம்மீள் வெளியீட்டு நிகழ்விற்கு ஆதரவளிப்பதன் மூலம் ஒரு ஈழத்து சஞ்சிகையின் பயணத்தில் முக்க்கியமான மைல் கல்லை நாட்டுவதுடன், உங்கள் பங்களிப்பானது, விநியோகம், கருத்தரங்குகள், சந்திப்புகள், இலக்கிய போட்டிகள், பரிசில்கள் மற்றும் ஊழியர் வளர்ச்சி போன்ற நன்மைகளுக்கு நிதியளிக்கும். இச்செயற்பாடுகளை வலுப்படுத்த உங்கள் ஆதரவை நாங்கள் நம்புகிறோம். மீள் வெளியீடு மற்றும் ஆவணப் பதிவைப் பராமரிப்பதற்குப் பெரு விருப்போடு காத்திருக்கும் பல்வேறு நபர்கள் மற்றும் திட்டங்களை இணைத்து ஆதரிப்பதற்கான எங்கள் பணிக்கு உங்கள் நன்கொடை பங்களிக்கிறது.
*** அன்பளிப்பினை நீங்கள் இந்த படிவம் மூலம் பணமாக தருவதற்கு பயன்படுத்தலாம். ***