மாஸ்ரராயிருந்தவருக்கும் ஏஜென்சி யாக இருப்பவருக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்?


அ வரை      எப்படி   உங்களுக்கு 
அறிமுகப்படுத்துவது? வாழ்க்கையின் 
பொருளாதாரப் பிரச்சனைகளை எண்ணும் ஆசிரியராயிருந்தது அவர் இறந்த காலம். நோட்டுக்களை எண்ணும் சப் ஏஜென்சியாக இருப்பது அவரது நிகழ்காலம் (கம்பி எண்ணும் கைதியாக இருப்பது அவரது எதிர்
காலம் என்பது எனது ஆருடம்;.

மாஸ்ரராயிருந்தவருக்கும் ஏஜென்சி
யாக இருப்பவருக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்? விரல் விட்டெண்ணக் கூடிய வித்தியாசங்களா? அடுக்கிக் 
கொண்டு போனால் வெளிநாட்டு 
வேலைவாய்ப்புக்காக அவரைத் தேடி வரும் பெண்கள் பட்டியல் போல் நீளும். அதையெல்லாம் சொல்லி உங்கள் கழுத்தை அறுக்கும் எண்ணம் இந்த மொட்டை பிளேடிற்கு எள்ளளவும் இல்லை. ஆயினும் அட்லீஸ் உங்கள் மூக்கையாவது கொஞ்சம் பதம்பார்க்கா
விட்டால் இந்த மொட்டை பிளேட்டின் பிறவிப்பயன் என்னாவது?  

மாஸ்ரராயிருந்த போது அவர் தேகத்
தில் வயிறு என்று ஒன்று இருந்ததா என்று எனக்கு ஒரு சந்தேகம். இப்
போது என்னடா என்றால் அவரு
டைய வயிற்றுக்குள் பிள்ளை கிள்ளை இருக்குதா என்று டவுட் (அவருக்கு சேலை கட்டி விட்டால் மகப்பேற்று மருத்
துவமனையில் எந்தவிதக் கஷ்டமு
மில்லாமல் அனுமதித்து விடலாம்.

சாதாரண வாடகை வீட்டில் வாழ்ந்த
வர்கள் இப்போது மாடி வீட்டில்! வெறும் தும்புக்கயிறு இருந்த அவர் வீட்டு நாயின் கழுத்தில் இரும்புச் சங்கிலி, அதே போல மாந்திரீகத் 
தாயத்து தவழ்ந்த அவரது மார்பில் 
தங்கச் சங்கிலி.

ஒரு லொக்கடான் சைக்கிள் இருந்த இடத்தை லான்ஸர் கைப்பற்றிக் கொண்
டதைப் போல, சொறி பிடித்த வங்கு நாயிருந்த இடத்தை ஒரு பொமரேனி
யன் ஆக்கிரமித்துக் கொண்டதென்
றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த பொமரேனியனைப் பற்றி ஒரு கதையே உண்டு. நாய் வாங்கினாலும் வாங்கினார். மனுஷன் பெருமை பிடி
படாமல் குரைக்கத் துவங்கி விட்டார். 
எங்கள் காது புளித்துப் போய்விட்டது. “முழு ஊரிலுமே நான்தான் முதன் முதல் பொமரேனியன் நாய் வாங்கி
னேன்.” என்று எக்கச்சக்கமான தம்
பட்டம் அடித்தார். 

அவருக்கென்னவோ தான் ஆகாகான். 
அது என்னவோ கோடிக் கணக்கான டொலருக்குக் காப்புறுதி செய்யப்பட்ட பந்தயக்குதிரை ஷேகார் என்று ஒரு நினைப்பு என்னவோ! 

ஒரு புண்ணியவான் அவருடைய “காவல் தெய்வத்தைக்” கடத்திக்
கொண்டுபோய் விட்டான். அன்றி
லிருந்து மனிதன் வாய் திறப்பதில்லை. களவு கிளவாயிருந்தால் தானே 
பொலீஸ் கிலீஸ் எல்லாம்.  அவருக்கே தெரியும் இது திருட்டல்ல. திட்டமிட்ட சதி. சரி விடயத்திற்கு வருவோம்.

இவர் மத்திய கிழக்கிற்கு ஏற்றுமதி பண்ணுவதில் (பாரம்பரிய மற்ற ஏற்றுமதிப் பொருள்) 99 வீதம் பெண்கள் தான். அபூர்வமாகத் தப்பித் தவறி ஒன்றிரண்டு ஆண்கள். இவ்வளவுக்கும்  நமது  சப்-ஏஜன்சி தன்னோடு தொடர்புள்ள முகவர் நிலையத்திலிருந்து  உரிய தொகையைப் பெற்றுக்கொள்ளும் 
அதேவேளை  அந்தப்பெண்களின் முதலிரு மாதச்சம்பளத்தைக் கறந்து விடுவார். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி, நமது மத்திய கிழக்கு சப் ஏஜன்சிக்கோ இரண்டு பக்கமும் பிடி. 
“கோழி மேச்சினாலும் கொரணமேந்துல 
கோழி  மேச்சோணும்” என்ற காலம் போய், எல்லோரும் ஒட்டகம் மேய்க்க சவுதிக்கு போவதைப் பார்த்தார் நமது மாஜி  மாஷ்ரர். திருக்குறளை மூடி 
வைத்தவர் “காலத்தோடு ஒட்டி ஒழுக” நினைத்தோ என்னவோ கோமேந்து 
உத்தியோகத்தைக் கை கழுவிவிட்டு
சவூதிக்கு ஆளனுப்பும் சப் ஏஜன்சி வேலையை ஏற்றுக்கொண்டார். “திரை கடலோடியும்  திரவியம் தேடு” என்பது முதுமொழி. இவரோ பொய்யா மொழி
யையே பொய் மொழியாக்கி விட்டார். திரை கடலோடாமல் திரை கடலுக்கு அப்பால் ஆட்களை அனுப்பி அனுப்பியே திரவியம் சேர்ந்து விட்டார்.

மனிதர் கொழும்பிலுள்ள ஹைட்பார்க் 
கோணரை கண்டிருந்தால் வாஷ்தவம்
தான். ஆனால் இங்கே வந்து சில 
கொண்டை கட்டிய  ஜனங்களிடம் பிச்சு உதறுவார். தான் லண்டனிலுல்ல ஹைட் பார்க்கில் மணிக்கணக்காக பேசியதாகவும்! அதை ஆயிரக்கணக்
கான வெள்ளைக்காரன்கள் வாய்க்குள் ஈ புகுவதும் தெரியாமல் கேட்டுக் கொண்
டிருந்ததாகவும்! அத்தோடு விடுவாரா? நான்கு வார்த்தை ஆங்கிலத்தில் “உஷ்-புஷ் என்று  வெளுத்துக் கட்டுவார். 
(அந்த அப்பாவிகளுக்கு ஆங்கிலம் 
தெரியாது என்ற தெம்பில் தான்) இனி அந்தப் பாமரர்களும் வாய்க்குள் ஆனை புகுவது கூடப் புரியாமல் கேட்டுக்கொண்
டிருப்பது நல்ல தமாஷ்!

நம்முடைய சப் ஏஜன்சி வீட்டில் இரண்டு, மூன்று நாள்களாக ஒரு புது முகத்தைக் கண்டேன். அவருடைய மனைவி வழிச் சொந்தமென்று நினைத்தேன் மூன்று நாளல்ல மூன்று வாரமாகியும் ஆள் நகர்வதாகக் காணோம்.

அம்பி (அதுதான் என்னுடைய வால்) சொன்னான்! “ என்னடா ஆசாமி வுநவெ அடிச்சிட்டான் போல”
நான் சொன்னேன்! ‘வானம்பார்த்த 
பூமியோ தெரியவில்லை’

ஒருநாள் ஆற்றுக்குக் குளிக்க வந்த அந்த இளைஞனோடு மெதுவாகக் கதை 
கொடுத்தோம். 
பிறகு தான் புரிந்தது அவன் ஏஜென்சியின் சொந்தக்காரன் அல்ல கடன் காரனென்று. போயும் போயும் இந்தத் தூக்கு
மரத்தை நம்பி முப்பதாயிரத்தைத் தூக்கிக் கொடுத்திருக்
கிறன். (தூக்கு மரம் என்பது அவருக்குச் சூட்டிய காரணப் பெயர்)

தூக்கு மரத்திடம் போன பணம் திரும்புவதென்றால், மரணமறியா வீட்டில் கடுகு வாங்கி புத்தர் பெருமானின் கைப்பட மந்திரிக்க வேண்டும் (முடியுற காரியமா சுவாமி)?

ஆரம்பத்தில் எமது ஏஜென்சியும் என்னவோ ஸ்ரீ ராமன் போல் “இன்று போய் நாளை வா” என்று சொல்ல, அவனும் “கஜனி முகம்மது போல்” தொடர்ந்தும் படை எடுத்திருக்
கிறான்.பாவம் கட்டிய காசுமில்லை, வெளிநாடுமில்லை, மொத்தத்தில் இலவு காத்த கிளி.

பார்த்தால் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனைப்போல்  தெரி
கிறது. நான் அவனிடம் கேட்டேன். “இன்னும் என்ன நம்பிக்
கையில் இங்க வாறிங்க?”
“பணம் கூட இங்க பெரிசல்ல” அந்த சப் ஏஜன்சி பேச்சை நம்பி ஊர்ல சொந்தக்காரர்கள் எல்லார்ட்;டையும் வெளிநாடு போறதா சொல்லிட்டு வந்துட்டேன். அப்ப எந்த முகத்தோட ஊர்ல தலை காட்டுறது.

பாவம் அவனுக்குத் தன்மானப் பிரச்சினையும் கூட!
நமது சப் ஏஜன்சியின் வாய் வீச்சைப் பார்க்க வேண்டுமே, பெரிய நெப்போலியன் மாதிரி; உண்மையில் மனிதன் வடி
கட்டிய பயந்தாங் கொள்ளி; பகலில் பத்துப்பேரை வீழ்த்தக் கூடிய வீராதி வீர சூர பராக்கிரமர் போல் பீத்துவார், இர
விலோ அவர் “ஒன்று”க்குப் போவதாயிருந்தாலும் கூட பக்கத்தில் இரண்டுபேர் துணைக்கு வேண்டுமென்பது  நாலுபேருக்குத் தெரிந்த பரம ரகசியம்.

அன்றிரவு அவர் கணக்கு, வழக்குப் பார்த்து முடிக்கும் போது (கறுப்புப் பணமல்லவா? பகலில் பார்க்க முடியுமா?) நள்ளிரவாகிவிட்டது. வேலை மும்முரத்தில் அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. எல்லாவற்றையும் மூடிவைத்து விட்டு உறங்க எழுந்த போது தவறுதலாக திறந்திருந்த ஜன்னலினுடாக ஒரு கை உள்ளே வந்தது.

கள்ளன் தான் சந்தேகமேயில்லை, விழிப்புப் பார்க்கின்ற 
வித்தைதான் அது. ஒளித்து வைத்திருந்த “மூஸாநபி 
காலத்து” வாளைக் கையில் ஏந்திக் கொண்டார். ஆனால் மனிதனுக்கு நடுக்கம். நான் மட்டும் என்ன செய்வது (இவ்
வளவுக்கும் அவர் வாளும் கையுமாக வீட்டிற்குள் தான்)

கள்ளன் பிடிக்க சரியான ஆண் துணை வேண்டுமே! உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் அந்த “இலவுகாத்த 
கிளியை” எழுப்பினார். அயர்ந்து  உறங்கிக் கொண்டிருந்த
வன் கண் விழித்தான். அவன் தப்பித் தவறி இசகு பிசகாக ஏதும் உளறி விடுவான். அந்தச் சத்தத்தில் கள்ளன் ஓடி விடுவான் என்ற பயத்தில் சுட்டுவிரலை வாயில் வைத்து அவர் சமிக்ஞை செய்ய - வாளும் கையுமாக எதிரே நின்று கொண்டிருந்த ஏஜன்சியை - இல்லை இல்லை திரிசூலமும் கையுமாக நின்றுகொண்டிருக்கும் சாட்ஷாத் எமதர்மனைத்
தான் அவன் கண்டான். அதுவும் உருவிய வாளும் 
கையுமாக அந்த நடுநிசி வேளையில் சுட்டுவிரலை வாயில் வைத்து எச்சரிக்கை செய்வதைப்பார்த்தால் எல்லாம் 
தலைகீழ்.

அடுத்த நிமிஷம்! அந்தப் பிரதேசமே அதிர்ந்தது 
“ஐயோ! என்ட உம்மா! ஏஜன்சி என்னைக் கொல்லப்
போறான்...

அக்கம் பக்கத்தவர்கள் எல்லாம் படுக்கையிலிருந்து வாரிச்சுருட்டிக்கொண்டு வீட்டு வாசலில் கூட எல்லாம் 
அல்லோல கல்லோலம்! நமது ஏஜன்சி இஞ்சி தின்ற 
குரங்காட்டம் இளித்தார். அவர் கள்ளன் பிடித்த கதையைக் கேட்டு வந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க மொத்தத்தில் எங்களில் பாதிப்பேருக்கு அல்ஸர் (வயிறு புண்).

“இலவு காத்த கிளி” பணம் போனால் போகிறது என்று 
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அடுத்த நாளே இடத்தைக் காலி பண்ணி விட்டான்.

அது போதாதா நமது ஏஜன்சிக்கு?
இலவு காத்த கிளியை அனுப்புவதற்கு நான் ஆடிய நாடகம் தானிது என்றாரே பார்க்கலாம். இது அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு பச்சப் புளுகு. இவருடைய 
மீசையில் மண் ஒட்டாத கதையை கலப்படமற்ற புளுகை நம்புவதற்கு நம்மவர்களின் மண்டைக்குள் கலப்படமில்லாத களிமண் இருக்கவேண்டுமே.

அன்றிலிருந்து ஏதாவது தப்புத் தவறாக நடந்துவிட்டால்  “என்னடா கமால் மாஸ்டர் கள்ளன் புடிச்ச மாதிரியோ” என்று ஒரு “மரபுச்சொற்றொடரே” உருவாகி விட்டது.