ஒரு எல்லையில் வந்து தலைநிமிர்ந்து பார்க்கும்போது ஐம்பதாவது வயதும் கதவைத் தட்டி நிற்கிறது.


சிறுவர்களாக இருக்கும்போது எப்போது நாமெல்லாம் பெரியவர்கள் ஆகலாம். அவர்களைப்போல் பல சாகசங்கள் நிகழ்த்தலாம். பள்ளிக்கூடம் போகாமல் எவ்வாறு சுதந்திரமாக இருக்கலாம் என்று நினைப்பதுமுண்டு.
ஆனாலும் எமது எதிர்பார்ப்பிற்கு மாறாக வாழ்க்கை அமைந்து வயதும் முப்பதைத் தாண்டும்போது நம் வாழ்க்கையின் ஒரு எல்லைப் பகுதி வந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும். 
    அந்த நேரத்தில் தொழிலிலும் குடும்பத்திலும் பல்வேறு பொறுப்புகள் முன்னால் வரிசைகட்டி நிற்கும். அவற்றுக்கான தீர்வுகளைக்கண்டு மனைவி பிள்ளைகளின் தேவைகளை பூர்த்திசெய்து வாழ்க்கையில் மல்லுக்கட்டி ஒரு எல்லையில் வந்து தலைநிமிர்ந்து பார்க்கும்போது ஐம்பதாவது வயதும் கதவைத் தட்டி நிற்கிறது.    நண்பர் ஒருவர் கூறினார்.  தனது மகனை ஒரு சிறந்த மனிதானாக உருவாக்க வேண்டுமென வளர்த்து விட்டு நிமிர்ந்து பார்த்த போது தனது 
சிறுவயதிலிருந்து  செய்ய நினைத்த பலவற்றை தவறவிட்டு விட்டேன் என.     முன்பெல்லாம் ஐம்பது வயதை அடைந்தவர்கள்; என்றால் அவர் சமூகத்தில் பெரிய மனிதனாக அனுபவம் பெற்றவராகவே மதிக்கப்
படுவார்கள். அவரகளது தோற்றப்  பொலிவும் அவ்வாறே இருக்கும்.    ஆனால் இப்போது ஐம்பது வயதை அடையும் போது தாம் முப்பத்தொன்பது வயதுகளில் இருப்பதைப் போன்ற உணர்வே பலருக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம் உணவுப் பழக்கங்கள் மருந்து மாத்திரைகள் என்பன மட்டுமன்றி கால மாற்றமும் எமது மனநிலை யும் என்றுதான் கூற வேண்டும்.
    எது எப்படி என்றாலும் எம்மவர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளில் பிறந்தநாள் என்பது சந்தோசத்தைத் தரக்கூடிய ஒரு கொண்டாட்டம்தான்;. புலத்திலும் இப்போது பலரும் ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். எப்போதும் மனைவி பிள்ளைகளுடன் இணைந்து தனது கணவனுக்கு இந்த ஐம்பதாவது பிறந்த தினத்தைக் கொண்டாடி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்கள். இதன்போது கண
வனுக்கு ஏற்படும் உணர்வுகள் எல்லையற்ற இன்பமாக இருக்கம். இப்படியான பிறந்தநாள் விருந்து உபசாரங்களை நான் லண்டனிலும் பார்த்திருக்கின்
றேன். முதுமையின் இளமையில் காலடி எடுத்து வைக்கும் ஐம்பதாவது பிறந்தநாள் என்பது உணர்வு பூர்வமான ஒன்றுதான்.     ஏனென்றால் பிறந்தநாள் கொண்டாட்டங்களையே விரும்பாத எமது சின்னண்ணாகூட அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதை உணர்ந்தேன். அவர் ஒரு சிறந்த குடும்பத் தலைவன். தனது குடும்பம் மட்டுமில்லாமல் ஊரில் உள்ள அனைத்து சகோதரர்களின் குடும்பத்திற்கும் கைகொடுக்கும் ஓய்வில்லா உழைப்பாளி. ஊரில் இருக்கும் போது ஒரு விவசாயியாகவும் படிப்பில் விண்ணனாகவும் இருந்தவர். ஆடம்பரமற்ற அமைதியான மனிதன். 


    ஆனாலும் தனது ஐம்பதாவது பிறந்தநாளன்று தனது பிள்ளைகளே தன்னை புகழ்ந்து பேசியதைக் கேட்டு மனம் பூர்த்தியடைந்ததைப் பார்த்தேன்;.    நானும் முதன்முறையாக எனது சகோதரனைப் பற்றி அவர் முன்னே பேச்சுரைத் தேன். இளம்வயதுக் கதைகளை நகைச்சுவையாக கூறி அவரை நெகிழ வைத்தேன். அவன் நேரடியாகவும், மறைமுகமாகவும் எனது வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்புகளுக்கு நன்றி கூறினேன்.
    எனது கூடப்பிறவா அண்ணனின் ஐம்பதாவது பிறந்த தினத்தில் அவரது மகள் தனது தந்தையைப் பற்றியும் அவர் தங்களுக்காக செய்த அர்ப்பணிப்பைப் பற்றியும் பேச்சுரைத்தபோது வாய்விட்டே அழுது 
விட்டாள். இது இப்படி இருக்க சில வேளைகளில் நகைச்சுவையான சம்பவங்களும் இந்த ஐம்பதுகளில் நிகழும். அநேகமாக கணவனைவிட வயதில் குறைந்ததாக இருக்கும் பெண்டீர் தனது கணவனைக் கிழவன் என்று கிண்டல் செய்து நகைப்பதும் கணவன் மார் தமது மனைவிகளை கிழவி என்று அடிக்கடி சீண்டுவதும் வழமையாக இருக்கும்.


 
    உணர்வுகளின் சங்கமமான ஐம்பதாவது பிறந்ததினத்தை ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டும். எந்தவொரு மனிதனின் சரித்திரத்திலும் யாருக்கும் தெரியாத சாதனைகள் பொதிந்திருக்கும். அதை அவனே உணரும்படி பேச்சுரைகளை குடும்ப அங்கத்தவரும் நண்பர்களும் வழங்கும்போது தனது வாழ்வின் அர்த்தத்தை அவன் புரிந்து கொள்வான். அத்தோடு ஒரு மனிதனைப் பற்றி நல்ல அபிப்பிராயங்களையும் நகைச்சுவையான நிகழ்வுகளையும் மீட்டிப் பார்க்கும் ஒரு சிறந்த பொழுதாகவும் அது அமைந்துவிடும்.    ஆனாலும் 1971ஆம் ஆண்டில் பிறந்தவர்களின் ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் 
புதியமுறையில் சூம்செயலியில் நடைபெறுவது உயிர்ப்புத் தன்மை குறைவாக உள்ள ஒரு முறையாகஇருந்தாலும் இப்போது இதுதான் உலக வழமையும் கூட. எனது நண்பர் ஒருவர் பக்கத்து தெருவில் வசிக்கி றார். அவரது வீட்டிற்கு வெளியே நான் வைத்த ஐம்பதாவது பிறந்ததின பரிசுப்பொதியை அவரது மனைவி கொரோணாத் தொற்று நீக்கியைத் தெளித்தெடுத்ததும், ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான்.     பின்னர் சூம் செயலியில் அன்று மாலை இடம்பெற்ற பிறந்தநாள் பிறந்ததின நிகழ்ச்சியில் அதனை நகைச்சுவையாக பகிர்ந்து சந்தோசிதோம். புலம்பெயர்ந்தோரில் பலர் இப்படி ஒரு ஐம்பதாவது வயது பிறந்ததினத்தை கொண்டாடத்தான் வேண்டுமா? இதில் செலவழிக்கும் பணத்தை ஊருக்கு அனுப்பி னால் என்னவென்று கேட்பதும் உண்டு. ஆனால் அப்படி கூறினாலும்; அவர்களுக்குள் ஒரு பெரும் கவலையும்; இருக்கும். பல விடயங்களை இனிமேல் செய்வது கடினம் என்பதும் உண்மை.    ஐம்பதினை எட்டும்போது பிள்ளைகள் மனைவி ஆகியோருக்கு செய்ய வேண்டிய சேவைகள் குறைந்திருக்கும். வீடு கட்டுவதற்கென பெற்ற கடன் தொல்லைகள் இல்லாமல் போயிருக்கலாம்;;. அதே நேரம் ஐம்பதைக் காரணமாக வைத்துக் கடன்கள் தருவதும் மறுக்கப்படலாம். அதுவும் ஓர் நன்மையே.    இருந்தாலும் வாழ்வில் வெற்றி பெற்ற பலரது வாழ்க்கை ஐம்பதுகளில்தான் ஆரம்பித்திருக்கிறது. மேற்படிப்புகள், தொழில் முயற்சிகள், சமூக அந்தஸ்து, புதிய பதவிகள் ஐம்பதுகளிலேயே பலருக்கு ஆரம்பித்திருக்கின்றன.   அதைவிடப் பிள்ளைகளும் வீட்டை விட்டு மேற்படிப்புகளுக்கு வேற இடங்களுக்கு போயிருந்தால் மனைவியுடன் தனி வாழ்க்கை ஆரம்பிப்பதற்கான ஒரு விழாவாகவும் இது இருக்கட்டும்.    ஐம்பதினை அனைவரும் கொண்டாடுவோம். அடைவு வைத்த ஆசைகளை மீட்போம்.- சுரேஸ் கணபதி