தனது காதலியை அபினீசியன் பூனைக்கும் ஒப்பிடும் ஒருவன், அந்தப் பூனை போல்....


மனிதனது செல்லப் பிராணிகளின் பூனையின் வகிபாகம் நாய்க்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல. ஆனாலும் நாயிலும் ஒரு படி மேலே போய் தன் இஸ்டதுக்கு வாழும் ஒரு ராஜா போல, வீடு முழுவ
தும் வலம் வரும் சுதந்திரத்தை தானே எடுத்துக் கொண்டுவிடும்.
    ஒரு காலத்தில் கிரேக்கர்கள் பூனையை கடவுளாக வணங்கினார்கள். ஆதனால் ஏற்பட்ட பழக்க தோஷமோ என்னவோ: மனிதனுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தன் பிறப்பியல்புகளை பெரிதளவில் மாற்றிக் கொள்ளாமல் திமிருடன் இருக்கும் மெதுமெதுவான பிராணி தான் இந்தப் பூனை.    பார்ப்பதற்கு மென்மையாக இருந்தாலும் வேட்டையாடுவதில் கில்லாடிதான். என்னதான் பதினாறு மணித்தியாலத்திற்குமேல் வீட்டிற்குள்ளே நல்ல பிள்ளையாக தூங்கி வழியும் சாதுவாகஇருந்தாலும் இரவில் பூனைகளை வீட்டிற்குள்ளே அடைத்து வைக்க முடியாது. பிறகு வெண்கலக் கடையில் பூனை புகுந்த கதையாக வீட்டிற்குள்ளே வேட்டையைத் தொடங்கிவிடும். ஆனால் வெளியில் செல்லும் பூனைகள் உழைத்துக் களைத்து உறங்கும். தன்னிலும் சிறிய உயிரினங்களை வேட்டையாடிப் புசிக்காமல் இருக்காது. இப்படி இவை வேட்டையாடி முப்பதிற்கும் மேற்பட்ட பறவை மற்றும் உயிரினங்கள் இந்தப் பூமியில் முகவரி இல்லாமலாக்கப்பட்டுள்ளன.நாம் எத்தனையோ வழிகளில் பாசம் காட்டி வளர்க்கும் பூனைகள் எம்மிடம் வெறுமனே இரண்டு தரம் கண்களை சிமிட்டித் தான் நன்றி காட்டுமாம். இப்படியான மனிதர்களும் உண்டு. தனது காதலியை அபினீசியன் பூனைக்கும் ஒப்பிடும் ஒருவன், அந்தப் பூனை போல் தனது காதலிக்கும் எவ்வளவுதான் காதலன் அன்பு காட்டினாலும் திருப்பிக் காட்டுகிறாள் இல்லையென்று அ. முத்துலிங்கம் தனது சிறுகதை யில் குறிப்பிட்டிருக்கி றார். இப்படி நன்றி காட்டுவதில் பேர்போன பூனைகள் தன்னை சுத்தப்படுத்துவதில் தினமும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் எடுத்துக் கொள்ளுமாம்.
    சில பூனைக்குப் பெயரே வைத்து விடுவார்கள். அதாவது பக்கத்து வீட்டு கள்ளப் பூனை கருவாட்டை களவெடுத்து விட்டதென்று பூனைகளுக்கு மோப்ப சக்தி அபாரமானது. அத்தோடு சத்தம் போடாமல் நகர்வதி
லும் கெட்டித்தனமிக்கது.    தனது பசிக்காக எந்தச் சூழலிலும் உணவு தேடும் பழக்கமுள்ள பூனைக்கு கள்ளப்பூனை பட்டம் எளிதாக ஒட்டிக்கொள்ளும். இப்படியான பூனையை உதாரணமாகக் கொண்டு பழமொழிகளும் உண்டு.

“ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்”


“பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டதாம்”

இதில் “பூனை குறுக்கே போனால் போன காரியம் உருப்படாது” என்பதுதான் பூனைக்கே சிக்கலான பழமொழி.    ஆனால் “ஊருக்கு ஊர் தொடர்பில்லாமல் காடுகளால் பிரிக்கப்பட்ட பகுதியில் படை நகரும் போது குறுக்கே பூனை வந்தால் அயலில் ஊடுகின்றது. அதனால் படை நகரும் ரகசியம் எதிரிக்கு தெரிந்துவி டும்” என்று விளக்கமும் உள்ளது.